Загрузка...

Загрузка...

THANGA PADUMAI - FULL MOVIE - தங்கப்பதுமை -( dips)

  • 5
  • 1 Year Ago
ஆண்டு - 1959 - பட்டுக்கோட்டையின் வரிகளுடனும், வெற்றிமுரசு கொட்டிய படம். குடும்பப் படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு, தாய் மார்களின் பேராதரவை பெற்றது. சிவாஜிக்கு கண் பறிக்கப் பட்டதை கண்டு, பத்மினி கதறும் காட்சி மிகவும் அருமை. ( தனது வாழ்கையில் ஏற்ப்பட்ட துன்ப நிகழ்வுகளுக்கு அவர் இப்படி துடித்திருப்பாரா ? நமக்கு தெரியாது.) இங்கு பத்மினி தன் திறமை அனைத்தும் காட்டி நடித்திருந்தாலும், தன் காந்தக் கண் பார்வையால் அனைவரையும் சுண்டியிழுக்கும் ஆற்றல் பெற்றிருந்தவர் ( 1950 ல் இளைஞர்களாக இருந்தவர்களிடம் இவரை பற்றி கேட்டுப்பாருங்கள்.)வில்லியாக வரும் T.R. ராஜகுமாரி. T.R. ராஜகுமாரியை பற்றி ஒருசில குறிப்புகள். இவரது இயற்பெயர் ராஜாயி. கருப்பு நிறமாக இருந்தாலும்கூட பார்பதற்கு கவர்ச்சியானவர். இவரது அத்தை S.P.L.தனலட்சுமி. அவர் ஒரு நடிகை.காளமேகம் என்ற படத்தில் கதாநாயகி. இவருக்கு துணையாக ராஜகுமாரி இருந்தார். தனலட்சுமியை, ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்ய சென்ற அந்தக்கால பிரபல இயக்குனர் K.சுப்ரமணியம் சென்றபோது, காபி கொண்டுவந்து கொடுத்த இவரை பார்த்து நாளை ஸ்டுடியோவில் வந்து என்னைப்பார் என கூறி வந்துள்ளார். இவருக்கு மேக்கப் போட்டு பலகோணங்களில் படம் எடுத்து பார்த்தால், இயக்குனரே அசந்துவிட்டார். அவர் எதிபார்ததைவிட மிக கவர்ச்சியாக இருந்துள்ளார். பிறகு அதிஷ்ட காற்று இவர்பக்கம் வீசலாயிற்று. கச்சதேவயானி " என்ற படத்திற்கு இவர்தான் கதாநாயகி. கதாநாயகன் கொத்தமங்கலம் சீனு. முதல் மூன்று நாட்கள் படத்திற்கு கூட்டமில்லை.புது நடிகை என்ன அழகு, என்ன அழகு என படம் பார்த்தவர்கள் கூற, நாளுக்குநாள் கூட்டம் கூடியது.பெரிய நகரங்களில் இந்தப்படம் 25, வாரம் ஓடியது. பிறகு " சூரிய புத்திரி " P.U.சின்னப்பாவுடன் மனோன்மணி " குபேர குசேலா " போன்ற படங்களிலும், M.K. தியாகராஜபாகதவருடன் , சிவகவி படத்தில் முக்கிய வேடத்திலும், ஹரிதாஸ் ( மூன்று தீபாவளி கண்ட படம்) படத்தில் தாசி ரம்பாவாகவும் நடித்தார். ஜெமினியின் " சந்திரலேகா " இவர் கதாநாயகி. மிக பெரிய பட்செட்டில் தயாரித்து, மிகப்பெரிய வெற்றிபெற்ற படம். பாகதவர், சின்னப்பா , இவர்களை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை பெற்றவர் T.R.மகாலிங்கம்.( ராஜகுமாரிக்கு மகாலிங்கம் இளையவர்) இவருடன் " இதயகீதம் " என்ற படத்தில் நடித்தார்.K.R.ராமசாமியுடன் " விஜயகுமாரி " என்ற படத்தில் நடித்தார். சென்னை தியாகராயநகரில் தன் பெயரிலேயே தியேட்டர் ஒன்றை கட்டினார். தம்பி T.R.ராமண்ணாவுடன் சேர்ந்து R.R.பிக்சர்ஸ் என்ற படக்கம்பெனியை துவங்கினார். இந்த கம்பெனியின் முதல்படம் " வாழப் பிறந்தவள் " அடுத்து கூண்டுக்கிளி " இதில் ராஜகுமாரி நடிக்கவில்லை.கூண்டுக்கிளி M.G.R. சிவாஜி சேர்ந்து நடித்த ஒரே படம். படம் ஏனோ தோல்வியை தழுவியது. அடுத்து M.G.R. அவர்களுடன் குலேபகாவலி" இதில் மூன்று கதாநாயகிகள். அதில் இவரும் ஒருவர். அடுத்து சிவாஜியுடன் " தங்கப்பதுமை " அந்தக்கால சூப்பர்ஸ்டார் ஐந்து பேருடனும் நடித்தவர். கடைசியாக வானம்பாடி " என்ற படத்தில் நடித்தார். ராஜகுமாரி தன் வாழ்க்கையின் பின் பகுதியை மிக அமைதியாக கழித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ராஜகுமாரி 20 - 9 - 1999 -ல் தமது 77- வயதில் காலமானார். மற்ற கலைஞர்கள் பற்றிய செய்திகள் அடுத்துவரும் பாடல்களில் வெளிவரும். - நன்றி -

Загрузка...

Загрузка...

Comments

Загрузка...